Label 10

Home » » அரசாங்க அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஊடகவிலாளர்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கு இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலத்தில் நடைபெற்றது!

அரசாங்க அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஊடகவிலாளர்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கு இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலத்தில் நடைபெற்றது!

Written By ammaan on திங்கள், 16 செப்டம்பர், 2013 | 11:04 AM

இலங்கை::அரசாங்க அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஊடகவிலாளர்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கு இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் சார்ல்ஸ் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.

தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்த இந்த கருத்தரங்கில் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ஹில்மி மொஹமட் உட்பட பல பிரமுகர்களும் கலந்துக் கொண்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலரும் இந்த கருத்தரங்கில் பங்கு பற்றினர்.
இக்கருத்தரங்கில் பங்கு பற்றியவர்களுக்கு ,அரசாங்க தகவல் திணைக்களத்தின் தமிழ் வெளியீடான "திங்கள் "சஞ்சிகையும்  இங்கு விநியோகிக்கப்பட்டன.


 
Share this article :

கருத்துரையிடுக

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. BATTICALOA - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger